Wednesday 31 October 2012

கொண்டாட்டம்::

♥ ♥

உன்னைக்

கொண்டாடும் போது

வாழ்வையே

கொண்டாடுகிறேன்!!

♥♥


Published with Blogger-droid v2.0.4

என் சங்கீதத்திற்காக...

என் தேவதைக்கான

பாடல்:


பல்லவி:

அன்பே சங்கீதா

சொர்க்கம் பக்கம் தா!

அழகே சங்கீதா

என்னுயிரில் இன்பம் தா!

உன் கண்ணில்

என்னைக் கொன்று

உன் அழகில் என்னை வென்று

நித்தம் நித்தம்

என்னை ஆளடி!


செல்லக் குரலில்

மெல்லச் சிணுங்கி

சிவந்த இதழில்

கவிதை எழுதி

மடியில் சாய்த்துக் கொள்ளடி!

உன் அன்பால் என்னை வெல்லடி!


சரணம் 1:


மழைநாளில் நீ எனக்கு

தேநீராய் வர வேண்டும்!

மறுநாளில் நீ எனக்கு

தேன்துளியாகும்

வரம் வேண்டும்!

மாமா மாமா

என்றழைத்து

என் இதயம்

தொட வேண்டும்!

வேண்டாமென்று

சொல்லும் போதும்

முத்தமழை பொழிய வேண்டும்!

அன்பே சங்கீதா

என் அழகே சங்கீதா...

என் ஊனும் சங்கீதா..

என் உயிரும் சங்கீதா!


சரணம் 2:

என்னருகில்

நீயில்லா நேரங்களில்

உன் நினைவில்

என் இதயம் துடிக்குமடி!

ஒருநாள் உன்னை

நான் பிரிய நேர்ந்தால்

அப்போதே என் இதயம்

வெடிக்குமடி!


உன் கண்ணழகில்

நான் ஒதுங்கி

உன் புன்னகையில்

உயிர் வாழ்வேன்!

என் நெஞ்செங்கும்

உன்னை விதைத்து

என் கண்ணுக்குள்

உன்னைப் புதைத்து

கண்மூடி தவமிருப்பேன்!


தகப்பனாய்

தோழனாய்

நானிருந்து

உன் ஆசைகளை

தீர்த்து வைப்பேன்!

மழலையாய்

நான் உனக்கு

செல்லக் குறும்புகளை

சேர்த்து வைப்பேன்!

அன்பே சங்கீதா..

அழகே சங்கீதா..

ஊனும் சங்கீதா..

என் உயிரும் சங்கீதா...!


Published with Blogger-droid v2.0.4

Monday 15 October 2012

ரசனை::

♥ ♥

பற்றவைத்த சிகரெட்

முடிவதற்குள்

முடிந்துவிடுகிறது

புகைத்தலின் மீதான

ரசனை!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Sunday 14 October 2012

மழைவாழ்த்து::

மழைவாழ்த்து

♥ ♥ ♥

நேற்று பெய்த மழையில்

இன்று முளைத்த தளிரே

நாளைய மழைக்கு காரணம்!

¤

இன்றும் மறக்காமல்

வந்திருந்த மழையில் நனைய

மறந்தேவிட்டேன்!

¤

மரணித்துப் புதைந்தாலும்

ஜனனம் தர மறப்பதில்லை

நன்றியுள்ள மழை!

¤

மழைநாளில்

மெருகேற்றப்படுகிறது

அனைவரின் கலைந்த காதலும்!

¤

மழைக்கு

நிகர்

மழையே!

¤

அதிகமானோரால்

மிக அதிகமாய்

நேசிக்கப்

படுவதொன்றும்

ஆச்சர்யமில்லை..

மழையென்றாலே

அதிகம்தான்!

¤

தொப்பலாய் நனைய ஆசைதான்..

மழைதான் நின்றுவிட்டது!

¤

நனைபவரைப் பொறுத்தே

மழைக்கு கிடைக்கும்

வாழ்த்தும் வசையும்!

¤

கொஞ்சம் மழை

கொஞ்சம் தேநீர்

நிறைய ஞாபகங்கள்!

¤

மழையை

ஒப்பிடலாம்

மழையோடு மட்டும்!

¤

ஊடலில் தனித்திருப்போரை

அச்சத்தில் அணைக்கவைத்து

காதலில் திளைக்கச்

செய்கிறது

இடியுடன் கூடிய மழை!

¤

நல்லவேளை

குடையெடுத்துச்

செல்லவில்லை..

நல்லமழை!

¤

பருவம் தவறிப்

பொய்த்த மழை

புருவம் உயர்த்துமளவிற்கு

பெய்துவிடுகிறது

ஏதாவதொரு நாளில்!

¤

ஆயிரம் கால்களில்

ஆனந்த தாண்டவம்..

இடியோடு ஒரு பெருமழை!

♥ ♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Saturday 13 October 2012

பலம்::

♥ ♥

வாள்வீசும்

வீரனாயினும்

சிரித்தபடியே

தோற்றாக வேண்டும்

குழந்தையுடன்

நிகழ்த்தும்

விளையாட்டுச் சண்டையில்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Thursday 11 October 2012

அழகு::

♥ ♥

வாழ்க்கையை அழகாய்

வாழ நினைத்தால்

நீயும் காதலையே

தேர்ந்தெடுத்துக்கொள்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Wednesday 10 October 2012

சபித்தல்::


♥ ♥

விட்டுவிட்டுப் பெய்யும்

மழை

விடாது சபிக்கப்படுகிறது

வெகு சிலரால்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Tuesday 9 October 2012

சபித்தல்::



♥ ♥

விட்டுவிட்டுப் பெய்யும்

மழை

விடாது சபிக்கப்படுகிறது

வெகு சிலரால்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Monday 8 October 2012

முதல்காதல்::

கவிதை

♥ ♥

சந்திக்கும் வரை தவம்

சந்தித்த பின் வரம்...

முதல்காதல்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Sunday 7 October 2012

கவிதை::


கவிதை

♥ ♥

புரியாத வார்த்தைகளைக்

குதப்பிக் குழறித் துப்பினாலும்

அழகாய்த்தானிருக்கிறது

குழந்தையின்

உளறல்கவிதை!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Thursday 4 October 2012

அழகு::



♥ ♥


கவிதைக்கு பொய் அழகு!

உன்னை எழுதுகையில் மட்டும்

கவிதைக்கு மெய்யும்

அழகு!!


♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

காதல்::

♥ ♥

காதல் ஒருமுறைதான்

பூக்கும்..

ஆமாம்..

இரண்டாம்முறை

பூப்பதற்கு செடி

இருக்காது!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Tuesday 2 October 2012

கவிதைக்கதை::

கவிதைக்கதை

♥ ♥

ஒவ்வொரு கவிதையும்

ஒவ்வொரு கதை சொல்ல

குழந்தை பற்றிய

கவிதை மட்டும்

கவிதை சொல்கிறது!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

தேநீர்மழை::

தேநீர்மழை

♥ ♥

¤

தேநீரின் சுவை

கூடிக்கொண்டே

போகிறது

மழை அதிகமாக அதிகமாக!

¤

உடல் நனையாத

பெருமழை

நாளொன்றில்

மனம் நனைத்தது

குடல் நனைத்த

தேநீர்த்துளி!

¤

ஒருகோப்பைத் தேநீரை

மணிக்கணக்கில்

சுவைப்பதற்கு

மழையை விட

சிறந்த காரணம்

ஏதுமிருக்க முடியாது!

¤

தேநீரோடு மழையை ரசிக்க

நீயிருக்கிறாய்..

உன்னோடு மழையை

ரசிக்க நானிருக்கிறேன்..

மழையோடு மழையை

ரசிக்கத்தான்

யாருமில்லை!

¤

அந்த தேநீர் விடுதியின் மேஜையிலிருந்த

காலிக் கோப்பை

உணர்த்தியது

யாரோ ஒருவர்

முழு மழையையும்

பருகிவிட்டுப்

போயிருந்ததை!

¤

ஒரு கையில் தேநீர்

மறு கையில் சிகரெட்

கவனிக்காத நேரத்தில்

கடந்துவிட்டது மழை!

¤

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4

Monday 1 October 2012

மழையாசை::



♥ ♥

பூப்பெய்திய

அந்தப் பெண்ணுக்கும்

மழையில் நனைய ஆசைதான்..

விமர்சனங்களுக்கு

பயந்துதான்

அவளும் விலகி நடக்கிறாள்!!

♥ ♥ ♥


Published with Blogger-droid v2.0.4