Saturday, 31 August 2013

கறுப்பு நதி::

கறுப்பு நதி

¤


கறுப்பு நதி பற்றி

நீங்கள் கேள்விப்பட்டிருக்க

மாட்டீர்கள்

ஆனால் பார்த்திருப்பீர்கள்..


அதர்ம பூமியை

இருப்பிடமாகக்

கொண்டிருக்கும்

எனது சமூகத்தின்

பிறப்பிடம்

இங்கிருந்துதான்

ஆரம்பமாகிறது!


சாதிச் சாக்கடையில் சறுக்கி

கரன்சிக் கால்வாயில் கலக்கும்

அப்பெருநதியினைப்

பருகிப் பருகியே

உயிர் வாழ்ந்து

கொண்டிருக்கிறது

பிரபஞ்சப் பிணங்கள்!


இந்நதியில் ஒரு துளி ருசித்துவிட்டால்

போதும்..

காதல் காமமாகும்..

காமம் காசாகும்..


கேட்கவே காது கூசுகிறது...

இருப்பினும் என்ன செய்ய?


தர்மபூமியில் பிறந்த நீங்களும்

என்னைப் போலவே ஒரு

வெள்ளை நதியைத்

தேடித்தேடிக் களைத்துப்போய்

கடைசியில் இந்தக்

கறுப்புநதியில்

கால் நனைக்கத்தான்

போகிறீர்கள்!


எனது

" சாத்தானின்

டைரிக் குறிப்புகள் "

கவிதைத் தொகுப்பிலிருந்து...


Published with Blogger-droid v2.0.4