Wednesday 31 October 2012

என் சங்கீதத்திற்காக...

என் தேவதைக்கான

பாடல்:


பல்லவி:

அன்பே சங்கீதா

சொர்க்கம் பக்கம் தா!

அழகே சங்கீதா

என்னுயிரில் இன்பம் தா!

உன் கண்ணில்

என்னைக் கொன்று

உன் அழகில் என்னை வென்று

நித்தம் நித்தம்

என்னை ஆளடி!


செல்லக் குரலில்

மெல்லச் சிணுங்கி

சிவந்த இதழில்

கவிதை எழுதி

மடியில் சாய்த்துக் கொள்ளடி!

உன் அன்பால் என்னை வெல்லடி!


சரணம் 1:


மழைநாளில் நீ எனக்கு

தேநீராய் வர வேண்டும்!

மறுநாளில் நீ எனக்கு

தேன்துளியாகும்

வரம் வேண்டும்!

மாமா மாமா

என்றழைத்து

என் இதயம்

தொட வேண்டும்!

வேண்டாமென்று

சொல்லும் போதும்

முத்தமழை பொழிய வேண்டும்!

அன்பே சங்கீதா

என் அழகே சங்கீதா...

என் ஊனும் சங்கீதா..

என் உயிரும் சங்கீதா!


சரணம் 2:

என்னருகில்

நீயில்லா நேரங்களில்

உன் நினைவில்

என் இதயம் துடிக்குமடி!

ஒருநாள் உன்னை

நான் பிரிய நேர்ந்தால்

அப்போதே என் இதயம்

வெடிக்குமடி!


உன் கண்ணழகில்

நான் ஒதுங்கி

உன் புன்னகையில்

உயிர் வாழ்வேன்!

என் நெஞ்செங்கும்

உன்னை விதைத்து

என் கண்ணுக்குள்

உன்னைப் புதைத்து

கண்மூடி தவமிருப்பேன்!


தகப்பனாய்

தோழனாய்

நானிருந்து

உன் ஆசைகளை

தீர்த்து வைப்பேன்!

மழலையாய்

நான் உனக்கு

செல்லக் குறும்புகளை

சேர்த்து வைப்பேன்!

அன்பே சங்கீதா..

அழகே சங்கீதா..

ஊனும் சங்கீதா..

என் உயிரும் சங்கீதா...!


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. உன் கவிதை இனிய கீதமாய்!வாழ்த்துகள் !

    ReplyDelete