Friday 27 July 2012

பரிசு::



¤

ஹேண்ட் பேக்

லிப்ஸ்டிக்

சுடிதார்

கொலுசு

ஒற்றை ரோஜா

இதில் எதை

உனது பிறந்தநாளுக்கு

பரிசளிக்கலாம்

என்று யோசித்தபடியே

உன்னைச் சந்திக்க

வந்தேன்..


நீயோ

கோவில் வாசலில்

விற்றுக் கொண்டிருந்த

பலூன்

வேண்டுமெனக்

கேட்டாய்..

நான் ஒரு முட்டாள்!


காதலிக்கு என்னென்ன

பிடிக்குமென

பட்டியலிடத் தெரிந்த

எனக்கு

குழந்தைக்கு

என்னென்ன பிடிக்கும் என

சிந்திக்கத் தெரியாமல்

போய்விட்டது!

¤


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. சில நேரங்களில் நம் கணிப்பு தவறாகக்கூடும்! அழகு கவிதைப்பா

    ReplyDelete