Wednesday, 22 August 2012

கடிதம் : 16

கிழிபடாத காதல் கடிதங்கள் : 16


2.3.2000            11.00 pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


முன்பு நான் சொன்னதைப் போலவே,

தொலைபேசியாலும்,

அலைபேசியாலும்

நமது கடிதங்கள் கொஞ்சம்

காணாமல் போயிருக்கிறது..


கல்லூரி முடித்து நீ ஒரு அலுவலகத்தில்

பணிபுரிகிறாய்..

நான் ஒரு பொம்மைக்கடை

வைத்திருக்கிறேன்..


இந்த

பொம்மைக்கடையைக்கூட,

காதல்தான்

எனக்கு தேர்ந்தெடுத்துத்

தந்தது!

ஆமாம்..

காதலுக்கு அழகுணர்வு அதிகம்!


நீ எனது கடை வழியாகத்தானே

அலுவலகம் செல்கிறாய்?


போகையிலும் வருகையிலும்

உன் பார்வையை

கொஞ்சம் வீசிச் செல்..


எப்போதாவது என் கடைக்கு வர நினைத்தால்,

குழந்தை வாடிக்கையாளர்கள்

இல்லாதபோது வா..


ஏனென்றால்,

கடைக்குள் இருக்கும்

அத்தனை குழந்தைகளும்

உன்னையே கேட்டு

அடம்பிடித்தால் நானென்ன செய்வேன்?


நீ என் கடைக்கு வருகின்ற நாள்வரை,

நானும் ஒரு பொம்மையாகவே

அமர்ந்திருப்பேன்!

விரைவில் சந்திப்போம்....


♥ தினந்தோறும்

காதல்தரிசனம்

நமக்கு  கிடைக்கட்டும் ♥


             இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment