Saturday 25 August 2012

கடிதம் : 19

கிழிபடாத காதல் கடிதங்கள் : 19


13.1.2001            10.00am


பிருந்தா என்கிற தேவதைக்கு,


நீ சொன்னதைப் போலவே காதலை

கல்யாணத்திற்கு

கூட்டிச் சென்றுவிட்டாய்..

இன்னும் இரண்டு

மாதங்களில்

நம் திருமணம் காதலால்

நிச்சயக்கப்படுகிறது!


அடிவயிற்றில் ஆயிரம்

பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பது

போன்ற உணர்வு

உனக்குள்ளும் இருக்குமென நினைக்கிறேன்!

முன்பு கடிதங்களை

எண்ணிக் கொண்டிருந்த நான்,

இப்போது நாட்காட்டியின்

காகிதங்களை

கணக்கிட்டுக்

கொண்டிருக்கிறேன்!


இரண்டு மாதங்களுக்குப் பிறகு

என் வாழ்க்கை

முழுவதுமாய்

ஆசீர்திக்கப்படும்..


என்வீட்டுக்

கம்பிக்கொடியில்

இனி துப்பட்டா

வானவில்கள்

காயத்தொடங்கும்..



படிக்கட்டுகள் கொலுசொலியில்

கிறங்கிக் கிடக்கும்!


சமயலறை முழுக்க

தேவதைவாசம்

நிரம்பிவழியும்!


தோட்டத்து மல்லிகைகள் உன்

கூந்தலேறி மணம்பரப்ப

மல்லுக்கட்டும்!


பூஜையறைக் கடவுளர்கள் நீ

தீபமேற்ற தவமிருக்கும்!


வீடெங்கும் உன்

வசியக்குரல்

கச்சேரி நடத்தும்!


மொத்தத்தில்

காடாய் விரிந்துகிடக்கும்

என் உலகம் இனி

பிருந்தாவனமாய்

பூத்துக் குலுங்கும்!


சீக்கிரமாய் வா....

உனது வரவிற்காக

வாசலோரம்

காத்திருக்கிறது

என் மீதிக் காதல்..!








♥ காதல் நம்

உலகெங்கும்

வியாபித்திருக்கட்டும் ♥



             இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


( பரிமாற்றம் தொடரும்..... )


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment