Friday, 24 August 2012

கடிதம் : 18

கிழிபடாத காதல் கடிதங்கள் : 18


23.8.2000            1.00pm


பிருந்தா என்கிற தேவதைக்கு,


எப்போதும் வெட்கத்தோடு

என்னருகில் வரும்

நீ, நேற்று முன்தினம்

துக்கத்தோடு வந்தாய்..


வீட்டில் திருமணம் பற்றி

பேசுகிறார்கள், ஏதாவது செய் என்றாய்..

நானென்ன செய்வேன்?

எனக்கு உன்னைக்

காதலித்துக் கொண்டிருக்க மட்டுமே தெரியும்!


வீட்டைவிட்டு வெளியேறவோ, பதிவுத்திருமணம் செய்யவோ உனக்கும் எனக்கும் துளியும்

உடன்பாடில்லை!


களவைக் கற்றுத்தந்த காதல்

நமக்கு கண்ணியத்தையும்

கற்றுத் தந்திருக்கிறது!

அந்த வகையில்

நாம் காதலுக்கு

கடன்பட்டிருக்கிறோம்.


ஒரு வாரமாய் உன்னிடம் எந்த சலனமுமில்லை..

எந்த வருத்தமுமில்லை..

காதலை விரைவில்

கல்யாணத்திற்கு

கொண்டு செல்வேனென

தோழியிடம் கூறினாயாம்..


உண்மையில் இக்கணத்தில்

என்னை அச்சம் கலந்த ஒரு

பெண்ணாகவும்,

உன்னை வீரம் நிறைந்த ஒரு

ஆணாகவும் உணர்கிறேன்...


உனக்கு உன் தந்தை மேல் இருக்கும்

நம்பிக்கையை விட,

ஒருமடங்கு அதிகமாய் எனக்கு,

காதல்மேல் நம்பிக்கையிருக்கிறது!!


காதல் என்னைக் கைவிடாதென்ற

உறுதியோடு

காத்திருக்கிறேன்...




♥ காதல் நமக்குத்

துணையிருக்கட்டும்  ♥



             இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


( பரிமாற்றம் தொடரும்..... )


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment