Wednesday 29 August 2012

என் பாடல் ::

பல்லவி:


காதலே காதலே எனக்குள் நீ இறங்கு!

உயிரில் இறங்கி நீ கிறங்கு!

காதலே காதலே

எனக்குள் நீ இறங்கு!

உயிரில் இறங்கி நீ கிறங்கு!


சுவாசம் முழுதும்

உன்னை நிரப்பி என்னை நீயும் ஆளு!

கனவு முழுதும் கவிதை பரப்பி இரவில் கொஞ்சம் நீளு!

காதலே காதலே

எனக்குள் நீ இறங்கு!

கொஞ்சம் இறங்கி நீ கிறங்கு!


சரணம்: 1


ஆசை என்பது மாயம்தான்!

என்னுள் வந்ததும்

நியாயம்தான்!

களவாடி

கண்முன் உலவாடியதே!

அன்று நானொரு பனித்துளி!

இன்று நான் பெருமழைத்துளி!

காதலாலே நானும்

வாழ்தலானேனே!

அன்னை தந்தை

நண்பன் தோழி

யாவும் நீயே..

நீ என் யாதுமானதுவே!

(காதலே காதலே...)


சரணம்: 2


உண்ண மறந்து

உறங்க மறுத்து

கண் முன்னே கரைகிறேன்!

பகலும்இரவும் சுருங்கிசுருங்கி

சூன்யமாய் நான் திரிகிறேன்!

இடியும்மழையும்

சேர்ந்து பொழிந்தும்

என் இதயம் வரண்டு துடிக்கிறேன்!

இரவல் வாங்கி

சிரித்து சிரித்து

இன்னும் ஏன்தான்

நடிக்கிறேன்?

காதலாலே மாறினேன்..

தினம் உச்சிவானில்

ஏறினேன்!

( காதலே காதலே..)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment