Monday 6 August 2012

என் பாடல்....



¤

பல்லவி:


காதல் மாயக்கண்ணாடி..

நிற்கிறேன் அதன் முன்னாடி..

நீதானே அதன் முன்னோடி

நானும் ஓடிவந்தேன் உன் பின்னாடி!


பிம்பம் எழ ஏங்கி நின்றேன்..

அதில் துன்பம் விழ ஏந்தி வந்தேன்..

மல்லி தேன்மல்லி

அடி நீயின்று

என்னுயிர்க்கொல்லி..

சொல்லி பொய்சொல்லி

தீயில் தள்ளினாயடி கள்ளி..


சரணம்:1


நீரின்றி அமையாது உலகு!

அடி நீயின்றி அமையாது அழகு!

நீயே என்காதல் நிலவு!

தேயாமல் என்னோடு உலவு!


உண்ண மறந்தேன்

உறங்க மறுத்தேன்

கொண்டதிலெல்லாம்

உன்னையே கண்டு

கண்முன்னாலே காணாமல் போனேன்!

பாதகத்தியே பாதகத்தியே

உன் பார்வை கத்தியால் எனை வெட்டினாயே!

கொல்லும் போதும்

நீ எனை வெல்லும்போதும்

அன்பே எனக்கு

வலிக்கவில்லை!

பொய்சொல்லி நீயும் தள்ளிப்போனால்

வாழ எனக்கு வேறு வழியுமில்லை!


சரணம்:2


ரோஜாவுக்கு கோபம் ஏனோ முள்ளின் மேலே!

முட்கள் என்றும்

அடிபணிந்திருக்கும்

ரோஜாவின் கீழே!


முள்ளில்லாத ரோஜாக்கள் பூப்பதில்லை!

பூவில்லாமல் முட்கள் முளைப்பதில் அர்த்தம் இல்லை!


ரோஜா நீயடி!

உனைக் காக்கும்

முள்ளும் நானடி!

அன்பே அன்பே நில்லடி!

எனை ஏய்த்த காரணம் என்னடி!

காதல் ஒரு கண்ணாடி!

நீயும் கல்லெறிந்தால்

தாங்குமோ அம்மாடி!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment