Thursday 16 August 2012

கடிதம் : 9

கிழிபடாத காதல்

கடிதங்கள் : 9



1.4.1998           7.30 am


பிருந்தா என்கிற

தேவதைக்கு,


நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்த

நாளிலிருந்து,

பிரபஞ்சம் முழுதும் பூக்களால்

நிரம்பியிருப்பதாகவும்,

சுற்றியிருப்போர்

எல்லாம் சூன்யமாய்

கடந்துபோவதாகவும்

தெரிகிறது என்று சொல்கிறாய்...


எனக்கோ உன்னைப்

பார்த்த நாளிலிருந்தே

அப்படித்தான் தெரிகிறது..


எனது சித்திரமும்

சூத்திரமும் நீயடி..

அள்ள அள்ளக் குறையாத உனது

காதல்பாத்திரம் நானடி..


உன்னால் நான் காண்பதையெல்லாம்

கவிதை செய்யவும்

கண்முன்னே

கடவுள் காணவும்

கற்றுக்கொண்டேன்!


காதல் அழிப்பதில்லை..

ஆனால் அளிப்பதுண்டு எனும் தத்துவத்தை

நாம் எழுதும் கவிதைகளில் கண்டேன்..


சரி, எத்தனை நாளைக்குத்தான்

காதலை கடிதத்திலேயே

பரிமாறிக் கொள்வது?


நமது முதல்சந்திப்பு விரைவில் நிகழட்டும்..


தேவதையை பக்தன் ஆலயத்தில் தரிசிப்பதே சிறந்தது என்பதால் முதல்சந்திப்பு

ஆலயத்திலேயே

அரங்கேறட்டும்..


இன்றிலிருந்தே

என்னை நான் தயார்படுத்திக்

கொள்கிறேன்...

நீயும் எனக்கான

வரங்கள் வழங்க தயாராகவே வா!


வரும் வெள்ளிக்கிழமைக்காக

நான் தவமிருக்கிறேன்!


♥ காதல் நம்மை அதிவேகமாய் சந்திக்கட்டும் ♥


            இப்படிக்கு,

     உன் வாசிப்பில்

               வசிக்கும்

                நான்...♥


(பரிமாற்றம் தொடரும்.....)


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment