Tuesday, 7 August 2012

பாடல்-2:::

பல்லவி:


வரமென வந்த தேவதையே

இன்று வார்த்தையில்

வலிதந்த நியாயமென்ன?

சாயம் பூசிய உன்

உதட்டால் இன்று

காயம் தந்த மாயமென்ன?

காதல் சொல்ல நானும்

வந்தேன் உன்னிடம்..

சாதல் ஒன்றை சொல்லிப்

போனாய் என்னிடம்..

காதல் தேடிப்போகும்

முன்னே உன்னிடம்

என் காதல் கொஞ்சம் சொல்லிப்

போகிறேன் உன் கண்ணிடம்..


உள்ளிருக்கும் ஏதோ

ஒன்றை மறைக்கிறாயோ?

வெளியிருக்கும்

என்னிடம் நீயும்

நடிக்கிறாயோ?

உன் கண்களில் காண்பது சுயமா?

அடி கண்ணே இது

எந்தன் பயமா?


சரணம்:1


முதல்நாள் உன்னைப்

பார்த்த போது என்

இதயம் இல்லை

எனக்குள்ளே!

சிலநாள் கழித்துப்

பார்க்கும் போது

உயிரே இல்லை என்னுள்ளே!

காதல்கதை பேசி

கைகோர்த்து நடந்திட நினைத்தேன்

உன்னோடு!

பொய்க்கதை சொல்லி

என்னை நீயும்

புதைத்தாயே மண்ணோடு!


மூச்சுமுட்டும் முத்தம் தந்து

கொஞ்சிடத்தான்

நினைத்திருந்தேன்!

மூர்ச்சையாக்கும் யுத்தம்

ஒன்றால் முழுவதையும் நீ

முடித்துவைத்தாய்!


உறங்காமல் உன்னோடு

உரையாட நினைத்திருந்தேன்!

மனம் இரங்காமல்

இரவுகளை நீயும்

சூறையாடி எரித்துவிட்டாய்!

புல்லரித்த உந்தன்

நினைவுகளும்

இன்று செல்லரித்துப் போனதென்ன?

சொல்லினிக்கும்

உந்தன் கிளிப்பேச்சால்

நெஞ்சில் கல்லெறிந்த

மாயமென்ன?


சரணம்:2


பொய்க்கோபம் கொஞ்சம்

காட்டி மன்றாட

நினைத்ததுண்டு!

உன் மெய்க்கோபம்

கண்டதனால் அது

திண்டாடிப் போனதடி!

என்வாழ்க்கை

சொர்க்கமென

எல்லோர்க்கும் சொன்னதுண்டு!

உன் வழக்கை கேட்டபின்னே

அர்பமாய் அது போனதடி!

மணப்பந்தல் வரவேற்பில்

மாலை சூட நினைத்ததுண்டு!

உன் மன வெளியேற்பில்

இன்று தள்ளாடி

நிற்பதுமென்ன?


சொல்ல மறந்த

சோகத்தினால் என்

சிந்தை கெட்டுப் போனதடி..

நீ சொல்லிப் போன

வார்த்தையினால்

என் சுயமும்

காயமானதடி..

உன் உள்ளறையில்

நானிருக்க

நீயோ கல்லறையில்

எனை வைக்க


என் இதயம் இங்கே

பதறுதடி..

காதல் சில்லறை போல்

சிதறுதடி..!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment