Thursday 21 June 2012

தோற்றுப் போன கவிதை::

இரவுகளை இரவல் வாங்கிக் கொள்ளும் காதலைப் போல,
நீயும் இரக்கமில்லாமல்
காதல் அரிதாரம் கலைத்து அழுகையைக் கொடுத்தாய்!

இதயம் இயக்குபவள் இல்லாததால் இயங்க மறுக்கிறது என் உலகம்!

காதல் பிரிவின் பரிதவிப்பால் என் நெஞ்செங்கும்
நெருஞ்சி முட்களாய் நிறைந்து கிடக்கிறது உன் நினைவு!

இதயம் களவாடக் கற்றுத்தந்த நீ,
உனை மறக்க கற்றுத்தர மறந்துவிட்டாய்!

மறந்துவிடு என்று நீசொல்லிப் போன அக்கணத்தை,
காதலின் ரணம் என்ற தலைப்பில்
காதல் தோல்வி பற்றிய கவியெழுத முயன்று,
முடியாமல் உறங்கிப்போகிறேன்!

அதுசரி.....

காதல் எப்போது தோற்றுப்
போயிருக்கிறது?

1 comment: