Monday 18 June 2012

நடிப்பு::

பள்ளி ஆண்டுவிழாவில்
ராதை வேடமணிந்து
கண்ணனைக்
காதலித்துக்
கொண்டிருந்த மகள்
பிருந்தாவின் நடிப்பைக் காட்டிலும்

ஔவையார் வேடமணிந்து
பாட்டால் முருகனுக்கு
பதிலளித்துக்
கொண்டிருக்கும்
பக்கத்துவீட்டு
பவித்ராவின் நடிப்பே மிகப்
பிடித்தமானதாய்
இருக்கிறது

காதல் திருமணம்
செய்து கொண்ட
எனக்கும் எனது
மனைவிக்கும்!

No comments:

Post a Comment