Wednesday 13 June 2012

ஒருத்தி இன்னொருத்தியாகும் கதை....

அலுவலகத்தில்

எதார்த்தமாய்

என்னோடு பழகும்

ஒருத்தியை

காதலிக்கிறாளெனவும்

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருக்கும்

ஒருத்தியை

காதலனுக்காக

காத்திருக்கிறாளெனவும்

அறிமுக நடிகை ஒருத்தியை

அனுசரித்துப்

போயிருப்பாளெனவும்

சந்தேகிக்கும்

எனது சபலபுத்தியால்

ஒருத்தி

இன்னொருத்தியாக்கப்

படுகிறாள்!


Published with Blogger-droid v2.0.4

1 comment: