Wednesday 13 June 2012

::முதல் பயணம்::

முந்தைய நிலையத்தில்

கையேந்திய பிச்சைக்காரனை

உதாசீனப்படுத்தி,

அடுத்த நிலையத்தில் டம்ளர் நீட்டிய

டீ வண்டிச்சிறுவனை

தவிர்த்து,

அதற்கடுத்த நிறுத்தத்தில்

ஐந்துரூபாய்

சிகரெட்டொன்றை

பத்துரூபாய்க்கு

வாங்கி பற்றவைத்து

நிலைகொள்ளாமல் தவித்த

மனதையும் என்னையும்

ஆசுவாசப்படுத்திக் கொண்டபடியே

முடிந்தது எனது

முதல் ரயில் பயணம்..!


Published with Blogger-droid v2.0.4

1 comment:

  1. yea!its fact...we r not ready to help but easily cheated by others!!!

    ReplyDelete