Saturday 16 June 2012

மாற்றம்::

மனைவிக்கும்
மகளுக்கும் ஸ்கூட்டி..
மகனுக்கு பைக்..
எனக்கு கார்
என்ற மாற்றத்தோடு
நகர்ந்து கொண்டிருக்கிறது
நகரம்!
யாருக்குத் தெரியும்?
ஒருவேளை இவையனைத்தும்
எங்கோ ஒரு பழைய இரும்புக்
கடையில் உடைபட்டுப்போன
எனது கிராமத்து சைக்கிளின்
உருமாற்றமாய்க்கூட
இருக்கலாம்!

No comments:

Post a Comment