Friday 15 June 2012

:: காதலும் கற்று மற ::

நான் எனது மனைவியோடும்
அவள் தனது கணவனோடும்

கைகோர்த்தபடி
கடைக்கண் பார்வையோடு
ஒரு கடைத்தெருவில்
கடந்துபோகையில்

உள்ளுக்குள் உறுத்தி உணர்த்திய எங்களின் கடந்தகாலக் காதலை,

வீடு வந்ததும் பனிசிந்தும் மொட்டைமாடி இரவில்
அரைக்கோப்பை
வோட்காவுடனும்
ஒருதுண்டு சிகரெட்டுடனும்
நான் மறந்து கொண்டிருக்கிறேன்!

பாவம்...
வோட்காவுக்கும் சிகரெட்டிற்கும்
இன்னபிற கேளிக்கைகளுக்கும்
பழக்கமில்லாத அவள் இந்நேரம்
எங்கனம் என்னை மறந்து கொண்டிருப்பாள்??

No comments:

Post a Comment