Friday 15 June 2012

ஆட்டோக்காரனின் காதல் க(வி)தை::

அவசர அவசரமாய் கிளம்பும் திங்கட்கிழமை..
ஹாரன் சப்தத்தில்
செவிகிழியும் செவ்வாய்க்கிழமை..
புதிரான முகவரி தேடியோடும் புதன்கிழமை..
வாடகை வராத வித்யாசமான வியாழக்கிழமை..
கோவில் வரை சென்றும் தரிசிக்காத வெள்ளிக்கிழமை..
கார்க்காரனின் ஏசல் பொறுக்கும்
சங்கடமான சனிக்கிழமை..
என அத்தனை கிழமைகளின் களைப்பையும் சலிப்பையும் தீர்த்துவிடுகிறது
உன்னுடனான ஒருமணி நேர
ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு..!

No comments:

Post a Comment